கருப்பட்டி இட்லி 

தேவை :
250 மி . லி அரிசிக்கு 1/2 கிலோ கருப்பட்டி

செய்முறை :
மேற்படி இட்லிக்கு மாவு   தயார் செய்வது போலவே உப்பு மட்டும் போடாமல் மாவை கட்டியாக தயார் செய்து வைக்கவும் .

காலையில் மாவின் 1/4  ஸ்பூன் சோடா உப்பு , தேங்காய்பூ விருப்பமான அளவு ,கருப்பட்டி பால் கெட்டியாகக் காய்ச்சி இலேசான சூடாகவோ அல்லது ஆறவிட்டோ வடிகட்டி மாவில் விட்டுக் கிளறவும்

இட்லி தட்டில் வேக வைக்கவும் . விருப்பப்படி இனிப்பை குறைக்கவோ , கூட்டவோ செய்யலாம் .

கருப்பட்டியைக் குறைத்துக் கொஞ்சம் சீனியையும் கலந்து கொள்ளலாம் .

இந்த மாவை இளஞ்சூட்டில் தோசையாக எண்ணெயில் அல்லது நெய் விட்டு சுடலாம்




Post a Comment

Previous Post Next Post